Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் கடந்த செப்டம்பர்
10-ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்ற முதல்வர் விஜய், தனது அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு துபாய் வழியாக இன்று சென்னை வந்தடைந்தார்.
லண்டனில் தங்கியிருந்த நாட்களில் முதல்வர் விஜய், பிரிட்டனைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்களையும், முதலீட்டாளர்களையும் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
தமிழக அரசின் தொழில் கொள்கைகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் திறமையான இளைஞர்களின் பங்களிப்பு குறித்து அவர் விளக்கியதைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முதலமைச்சர் விஜயின் இங்கிலாந்து பயணம் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளதாகவும், தமிழகத்தை 2036ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை நோக்கி முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முதல்வரின் லண்டன் பயணம் அமைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தனது பயணத்தின் இறுதிக்கட்டமாக லண்டனில் வாழும் தமிழ் சமூகத்தினருடனும் முதல்வர் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து லண்டனில் இருந்து புறப்பட்ட அவர், துபாய் வழியாக இன்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Hindusthan Samachar / vidya.b