செப்.23-24-ல் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் சிந்தன் சிபிர் கூட்டம்
புதுடெல்லி, 17 செப்டம்பர் (ஹி.ச.) புதுடெல்லியில் வரும் செப்டம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்கும் இரண்டு நாள் சிந்தன் சிபிர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் சேவா தீர்த்தில் நடத்த தி
செப்.23-24-ல் மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் சிந்தன் சிபிர் கூட்டம்


புதுடெல்லி, 17 செப்டம்பர் (ஹி.ச.)

புதுடெல்லியில் வரும் செப்டம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்கும் இரண்டு நாள் சிந்தன் சிபிர் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டம் சேவா தீர்த்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் அமைச்சர்கள் நிர்வாகம் சார்ந்த விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கவும், நடைபெற்று வரும் பணிகளை மதிப்பாய்வு செய்யவும், வரும் காலத்திற்கான முன்னுரிமைகள் குறித்து ஆலோசிக்கவும் உள்ளனர்.

இந்த சிந்தன் சிபிர் கூட்டத்திற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, இணை அமைச்சர்கள் அனைவருடனும் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

அப்போது அவர்களது அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்த பல்வேறு அம்சங்கள் தொடர்பாக கருத்துக்களை கேட்டறிந்தார்.

துறைகள் வாரியான முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதும், இணை அமைச்சர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறுவதும் இந்த சந்திப்பின் நோக்கமாக இருந்தது.

இதன் தொடர்ச்சியாக நடைபெற உள்ள அமைச்சரவை அமைச்சர்களுக்கான இந்த அமர்வு, முக்கிய நிர்வாக முன்னுரிமைகள் குறித்த விரிவான விவாதத்திற்கும், அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b