தே.மு.தி.க விற்கு 10 இடங்கள் கொடுத்த பொழுது வரவேற்ற ஒரே நபர் நான் தான் -பிரேமலதா பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி
மதுரை, 17 செப்டம்பர் (ஹி.ச.) கடலூர் மஞ்சக்குப்பம் டவுன்ஹாலில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவ
திருமாவளவன்


மதுரை, 17 செப்டம்பர் (ஹி.ச.)

கடலூர் மஞ்சக்குப்பம் டவுன்ஹாலில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில், அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,

திமுக தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே சில கருத்துகளை தெரிவித்ததாக கூறினார்.

கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த கட்சிகள் பதவிக்காக வெளியேறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், திமுகவும் தேமுதிகவும் திடீரென கூட்டணிக்குள் வந்த போது, ஏற்கனவே உடன் இருந்த கட்சிகளுக்கு மகிழ்ச்சி இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும், அந்த உறவு பாதிக்கப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் தான் கூறியதாக விளக்கமளித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது ஆளும் கட்சிகளில் ஒன்றாகவும், அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதும் சிலருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

தேமுதிகவுக்கு 10 இடங்கள் வழங்கப்பட்டபோது, அதை வரவேற்ற ஒரே நபர் தான்தான் என பிரேமலதா விஜயகாந்த் பேசியது குறித்தும் திருமாவளவன் பதிலளித்தார்.

தான் தேமுதிகவை குறை சொன்னதாக பிரேமலதா விஜயகாந்த் புரிந்து கொண்டிருக்கிறார் என்றும், தாம் தெரிவித்த கருத்தின் நோக்கம் தேமுதிகவை விமர்சிப்பது அல்ல என்றும் திருமாவளவன் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam