தமிழ்நாட்டின் ஒவ்வொரு மனிதருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வரை பயணம் தொடரும் – முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாடு, 17 செப்டம்பர் (ஹி.ச.) திமுக தொடங்கப்பட்ட நாளையொட்டி, திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஒரு இயக்கத்தின் வெற்றி என்பது அது எத்தனை ஆண்டுகளை
தங்கம் தென்னரசு


தமிழ்நாடு, 17 செப்டம்பர் (ஹி.ச.)

திமுக தொடங்கப்பட்ட நாளையொட்டி, திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

ஒரு இயக்கத்தின் வெற்றி என்பது அது எத்தனை ஆண்டுகளைக் கடந்தது என்பதில் இல்லை என்றும், எத்தனை வாழ்க்கைகளை மாற்றியது என்பதில்தான் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு வந்தது எது எனத் திரும்பிப் பார்க்கும்போது அதற்கான பதில் திராவிட முன்னேற்றக் கழகம் எனத் தெரிவித்துள்ள தங்கம் தென்னரசு, பிறப்பால் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட காலத்தில் கல்வியை உரிமையாக்கி, சமூகநீதியை அரசியல் கொள்கையாக்கி, சாதாரணக் குடும்பங்களில் பிறந்தவர்களையும் படிக்க வைத்து சாமானியர்களையும் சாதனையாளர்களாக மாற்றியது திமுக எனக் குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் விதைத்த கொள்கை, பேரறிஞர் அண்ணா காட்டிய அரசியல் பாதை, முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய முன்னேற்றப் பாதை ஆகியவற்றின் வழியில், தற்போதைய திமுக தலைவர் தளபதி அவர்களின் லட்சியப் பயணம் தொடர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மனிதருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வரை இந்தப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றும் தங்கம் தென்னரசு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P