மாற்றுத்திறனாளி மீது வழிப்பறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் – கனிமொழி
சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச) கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே மாற்றுத்திறனாளியான ராஜா என்பவர் தாக்கப்பட்டு வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்
Kani


Nn


சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச)

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே மாற்றுத்திறனாளியான ராஜா என்பவர் தாக்கப்பட்டு வழிப்பறி செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

திருக்கோவிலூர் அருகே மாற்றுத்திறனாளியான ராஜா என்பவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம், தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலவும் நிலைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு என குறிப்பிட்டுள்ளார்.

குற்றங்கள் நாள்தோறும் அதிகரித்து வருவதை மக்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வரும் நிலையில், சட்டம் ஒழுங்கை காக்க தவெக அரசு உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் ராஜாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அவரை தாக்கி பணத்தை பறித்தவர்களை உடனடியாக கைது செய்து, திருடப்பட்ட பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ