செப்.19-ல் திமுக முப்பெரும் விழா: தலைமைக் கழகம் அறிவிப்பு
சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இந்த விழா நடைபெற உள்ளது. முன்னதாக, செப்டம்பர் 15-ம் தேதி முப்பெரும் விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்
ஸ்டாலின்


சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இந்த விழா நடைபெற உள்ளது. முன்னதாக, செப்டம்பர் 15-ம் தேதி முப்பெரும் விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து விழா ஒத்திவைக்கப்பட்டது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 19-ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா நடைபெறும் என தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

முப்பெரும் விழா என்பது தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் தி.மு.க. தொடக்க நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தப்படும் முக்கிய கட்சி நிகழ்வாகும். இந்த விழாவில் கட்சியின் முன்னோடிகள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து செப்டம்பர் 16-ம் தேதி வெளியிட்ட பதிவில், வைரஸ் தொற்றால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும், மேலும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஓய்வெடுக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்

ஒத்திவைக்கப்பட்ட திமுக முப்பெரும் விழா செப்.19-ல் நடைபெற உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam