Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
தங்களின் உறுதியான தலைமை மற்றும் தேசத்தின் மீதான அர்ப்பணிப்பு உணர்வால் இந்தியா தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் இருந்து தொடர்ந்து நாட்டுப் பணியாற்ற வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியில் வேண்டிக் கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b