முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் உடல்நலக் குறைவால் காலமானார்
சிவகங்கை, 17 செப்டம்பர் (ஹி.ச) சகாங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மா. சுதர்சன நாச்சியப்பன் (78) உடல்நலக் குறைவு காரணமாக இன்று சிவகங்கையில் காலமானார். தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராக திகழ்ந்தவர் சுதர்சன
முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் உடல்நலக் குறைவால் காலமானார்


சிவகங்கை, 17 செப்டம்பர் (ஹி.ச)

சகாங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மா. சுதர்சன நாச்சியப்பன் (78) உடல்நலக் குறைவு காரணமாக இன்று சிவகங்கையில் காலமானார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராக திகழ்ந்தவர் சுதர்சன நாச்சியப்பன். வழக்கறிஞராக தனது பொது வாழ்வை தொடங்கிய இவர், காங்கிரஸ் கட்சியில் படிப்படியாக உயர்ந்து தேசிய அளவில் கவனம் பெற்ற தலைவராக வளர்ந்தார்.

1947-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி பிறந்த இவர், 1999-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார். அந்த தேர்தலில் அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை தோற்கடித்தது தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக பார்க்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் நீண்ட காலம் பணியாற்றிய இவர், 2013 முதல் 2014 வரை மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிவகங்கையில் உள்ள அவரது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

அவரது மறைவு காங்கிரஸ் கட்சியினரிடையேயும், சிவகங்கை மாவட்ட மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b