வன்னியர் இட ஒதுக்கீடு போராளிகளுக்கு வீரவணக்கம் - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை
விழுப்புரம், 17 செப்டம்பர் (ஹி.ச.) விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் அமைந்துள்ள வன்னியர் இட ஒதுக்கீடு போராளிகள் மணிமண்டபத்தில், இட ஒதுக்கீட்டுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு இன்று வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. 1987-ம் ஆண்டு வன்னியர
வன்னியர் இட ஒதுக்கீடு போராளிகளுக்கு வீரவணக்கம் - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை


விழுப்புரம், 17 செப்டம்பர் (ஹி.ச.)

விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் அமைந்துள்ள வன்னியர் இட ஒதுக்கீடு போராளிகள் மணிமண்டபத்தில், இட ஒதுக்கீட்டுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு இன்று வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

1987-ம் ஆண்டு வன்னியர் சமுதாயத்திற்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற தொடர் சாலை மறியல் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 21 போராளிகளின் நினைவை போற்றும் வகையில் இந்த மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் தியாகிகள் தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், சமூக அமைப்பினர் இங்கு வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

அந்த வகையில் இன்று நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 21 தியாகிகளின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் அவர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து, இட ஒதுக்கீடு போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் குறித்தும், தியாகிகளின் அர்ப்பணிப்பு குறித்தும் அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

இந்த நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் திரளாக பங்கேற்றனர்.

Hindusthan Samachar / vidya.b