பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி, கார்கே பிறந்தநாள் வாழ்த்து
புதுடெல்லி , 17 செப்டம்பர் (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவருக்கு பா.ஜ.க. தலைவர்கள், மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த
A


புதுடெல்லி , 17 செப்டம்பர் (ஹி.ச.)

பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அவருக்கு பா.ஜ.க. தலைவர்கள், மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்க வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில்,பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்க வாழ்த்துவதாக கார்கே தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA