Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 17 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் திருக்குடமுழுக்கு விழா இன்று காலை முதல் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த குடமுழுக்கு விழாவிற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் குவிந்துள்ளனர்.
பக்தர்களின் வருகையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மாநகரின் ஐந்து முக்கிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பழங்காநத்தம் ரவுண்டானா, எல்லீஸ் நகர், டி.பி. ரோடு ரயில்வே மேற்கு பகுதி, தெப்பக்குளம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
வெளியூர்களில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் மாநகருக்குள் நுழையாமல் இந்த தற்காலிக நிலையங்களிலேயே நிறுத்தப்படுகின்றன.
அங்கிருந்து பக்தர்கள் மாநகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் மூலம் கோவிலுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.
இந்த நடவடிக்கை மூலம் கோவில் வளாகத்தை சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்து சீராக இருப்பதுடன், பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்ய முடிவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b