Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 17 செப்டம்பர் (ஹி.ச.)
தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரமேஷ் பேசுகையில்,
தமிழக முதல்வரின் ஆட்சியில் மக்கள் எந்தக்குறையும் இல்லாமல் சீரும் சிறப்புமாக உள்ளனர்.
இடைத்தேர்தலில் உழைக்க உள்ளோம்.
நாங்கள் ஜெயிப்போமா டெபாசிட் வாங்குவோமா என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் உள்ளோம். அதனால் பாசிட்டிவ்வாக யோசியுங்கள்.
எங்கள் கொள்கை விளக்க மாநாடு நடைபெற்ற போதே பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை என தைரியமாக சொன்னவர் எங்கள் தலைவர். அவருக்கு எல்லா மதமும் எல்லா மக்களும் ஒன்று தான்.
நாடு முழுவதும் உள்ள நம்பிக்கை மக்களின் நம்பிக்கையை ஏற்று முதல்வர் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
எங்கள் தலைவருக்கு எம்மதமும் நம் மதம் என்பது தான் கோட்பாடு என பேசினார்.
Hindusthan Samachar / ANANDHAN