Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)
காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான டாக்டர் ஈ. எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் இன்று (செப்டம்பர் 17 ஆம் தேதி) அதிகாலை மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அடைந்தேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
அதில்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தின் குரலாக ஒலித்த அவர், தனது நீண்ட அரசியல் பயணத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கைகளில் உறுதியுடன் நின்று மக்கள் பணியாற்றியவர்.
சட்டம், அரசியல், பொதுவாழ்வு எனப் பல்வேறு தளங்களில் தனது அறிவாற்றலாலும், அனுபவத்தாலும் தனித்த முத்திரை பதித்தவர்.
அவரது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் தமிழக அரசியல் களத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், காங்கிரஸ் பேரியக்கத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN