Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 76-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் பொது வாழ்வில் மேலும் பல புதிய சாதனைகளை படைத்து, தொடர்ந்து நாட்டுக்கு சிறப்பான சேவையாற்ற வேண்டும் என்று மனதார வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி அவர்களின் அனுபவமும், தொலைநோக்கு பார்வையும் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு வலு சேர்ப்பதாகவும், அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் நலத்துடனும் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற இறைவனை பிரார்த்திப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b