Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)
செப்டம்பர் 17, திராவிட இயக்க வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்று திமுக முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்,
ஏற்றத்தாழ்வுகளாலும், மூடநம்பிக்கைகளாலும் பல நூற்றாண்டுகளாக முடங்கிக் கிடந்த தமிழ்ச் சமூகத்திற்குச் சுயமரியாதை உணர்வூட்டி, பகுத்தறிவுப் பாதை காட்டிய , சமூக விடுதலைப் போராட்ட வீரர் தந்தை பெரியார் பிறந்த நாள் இன்று.
அவரது சமூகச் சீர்திருத்த லட்சியங்களையும், நீதிக்கட்சி முன்னெடுத்த சமூகநீதிக் கொள்கைகளையும் அரசியல் களத்தில் இடைவிடாது முன்னெடுத்து, அவற்றைச் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் உருமாற்றும் நோக்குடன், தந்தை பெரியாரின் தலைமாணாக்கரான பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியதும் இதே நாள்தான்.
தமிழர் முன்னேற்றத்தையும், சுயமரியாதை மிக்க வாழ்வையும் உயிர்மூச்சாகக் கொண்ட ஒரு பெருந்தலைவரும், ஒரு பேரியக்கமும் தோன்றிய இந்நாளில், சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, மத நல்லிணக்கம், மனிதநேயம் ஆகிய உயரிய விழுமியங்களை என்றென்றும் தமிழ் மண்ணில் நிலைநிறுத்துவதற்கான வரலாற்றுப் போராட்டத்தைத் தொய்வின்றி முன்னெடுக்கும் உறுதியைப் பெறுவோம் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN