பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர் தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும் - மு.க.ஸ்டாலின்
சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.) தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் புரட்சி வணக்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப
மு.க.ஸ்டாலின்


சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)

தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் புரட்சி வணக்கம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில்,

தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்ததாகவும், ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டதாகவும், பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை என்றும், அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

வெளிச்சமற்ற இடம் இருள், கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள்.

‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது எனத் தெரிவித்துள்ள அவர், பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர் தலைமுறைகள் கடந்து ஒளிர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P