பெரியாரின் சமூகநீதிப் பாதையில் என்றும் நடந்திட உறுதியேற்போம்-முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.) தந்தை பெரியார் ஈ.வெ.ரா. பிறந்தநாளையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஆயிரம் ஆண்டுகளாக வேரூன்றியிருந்த சாதிய ஆ
இபிஎஸ்


சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)

தந்தை பெரியார் ஈ.வெ.ரா. பிறந்தநாளையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

ஆயிரம் ஆண்டுகளாக வேரூன்றியிருந்த சாதிய ஆதிக்கம், சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடி, சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், சமூகநீதி ஆகிய நான்கு தூண்களின் மீது புதிய எழுச்சிமிகு சமூகத்தை கட்டமைக்கப் போராடியவர் பெரியார் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெரியாரின் போராட்டம் ஒரு தனிமனிதருக்கு எதிரானதல்ல; ஆதிக்கத்திற்கு எதிரானது என்றும், அவரது குரல் ஒரு காலத்திற்கானதல்ல; சமத்துவம் நிலைநாட்டப்படும் வரை தொடர வேண்டிய குரல் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

“பிறப்பால் உயர்வு - தாழ்வு இல்லை; மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும்” என்ற சமூகநீதிப் பாதையை தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஆழமாகப் பதித்த பெரியாரின் வழியில் என்றும் நடந்திட உறுதியேற்போம் எனவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P