Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 செப்டம்பர் (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பயங்கரவாதத்துக்கு எதிரான ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ கொள்கை நடைமுறையில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சட்டப்பிரிவு 370 ரத்து, துல்லியத் தாக்குதல், வான்வழித் தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ உள்ளிட்ட முடிவுகள் மூலம், இந்தியா இனி பயங்கரவாதத்தை வெறுமனே கண்டிப்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தீர்க்கமான பதில்களை வழங்கும் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நக்சலிசம் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், வடகிழக்கு மாநிலங்களில் பல ஆண்டுகளாக நீடித்த பிரச்சினைகளுக்கு அமைதி ஒப்பந்தங்கள் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பான இந்தியா என்பது வளமான இந்தியாவை உருவாக்குவதற்கான முதல் தேவையாகும் என்றும், பிரதமர் மோடி இதனை நிரூபித்துள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P