சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா - வழக்கறிஞர்கள் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளையொட்டி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பாஜக மாநில சட்டப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் குமரகுரு தலைமையில் கேக் வெட்டி, பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்த
Adv


சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)

பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளையொட்டி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பாஜக மாநில சட்டப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் குமரகுரு தலைமையில் கேக் வெட்டி, பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலும் பாஜக மாநில சட்டப்பிரிவு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய குமரகுரு,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் நாடு வளர்ச்சியடைந்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்றும், தொடர்ந்து இந்தியாவை வழிநடத்த வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ