பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.) இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் தனது அதிகாரப்பூர்வ சம
விஜய்


சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பதிவில்,

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

1950-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் உள்ள வட்நகரில் பிறந்த நரேந்திர மோடி, இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

2014-ம் ஆண்டு முதல் இந்திய பிரதமராகப் பதவி வகித்து வருகிறார்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் மோடிக்கு நல்ல உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளை வாழ்த்தியுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam