சமூக நீதி நாள் - தலைமைச் செயலகத்தில் இன்று மாலை முதல்வர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.) தந்தை பெரியாரின் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது. இதன் மு
Social Justice Day: Pledge-taking ceremony


சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)

தந்தை பெரியாரின் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது.

இதன் முக்கிய நிகழ்வாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் அவர்கள் உறுதிமொழியை வாசிக்க, அவருடன் அனைத்துத் துறை செயலாளர்களும் உறுதிமொழியை வழிமொழிந்து ஏற்க உள்ளனர்.

இது தொடர்பாக பொதுத்துறை செயலாளர் சுந்தரவள்ளி அனைத்துத் துறைகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில்,

தலைமைச் செயலகம் மட்டுமின்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அரசின் அனைத்து துறை அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் தவறாமல் சமூக நீதி உறுதிமொழியை ஏற்கும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b