Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 17 செப்டம்பர் (ஹி.ச.)
தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி கே.சி.ஆர். பண்ணை வீட்டின் நிலங்கள் தொடர்பாக மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது.
இதையடுத்து, சித்திப்பேட்டை மாவட்டம் மற்கூக் மண்டலம் எரவள்ளியில் உள்ள அவரது பண்ணை வீட்டை சுற்றியுள்ள அரசு நிலங்கள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பண்ணை வீட்டை ஒட்டியுள்ள அரசு நிலங்களின் சர்வே எண்கள், அந்த நிலங்களில் ஏற்கனவே சாகுபடி செய்த விவசாயிகளின் பெயர்கள் மற்றும் தற்போதைய நிலப்பதிவு விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
மேலும், நிலங்களின் தற்போதைய நிலை குறித்து கள ஆய்வு நடத்தி அறிக்கை தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
கே.சி.ஆர். பண்ணை வீட்டின் நிலங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சட்டசபையில் அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்.
கே.சி.ஆர். பண்ணை வீட்டின் நிலங்களின் பரப்பளவு மற்றும் அவற்றின் தன்மை குறித்து காங்கிரஸ், பி.ஆர்.எஸ். கட்சிகளுக்கு இடையே அரசியல் விவாதம் நீடித்து வரும் நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகளின் ஆய்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA