Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 செப்டம்பர் (ஹி.ச.)
பகுத்தறிவுப் பகலவன், சுயமரியாதை இயக்கத்தின் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் 148 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், மரிய வில்சன் மற்றும் வெங்கட்ரமணன் ஆகியோர் நேரில் சென்று மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள்,
ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பகுத்தறிவு, சமூக நீதி ஆகிய கொள்கைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் தந்தை பெரியார் என்றும், அவர் காட்டிய வழியில் தமிழக அரசு சமூக நீதியை நிலைநாட்டும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
அவரது கருத்துக்கள் இன்றைய தலைமுறையினருக்கும் என்றும் வழிகாட்டியாக இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
Hindusthan Samachar / vidya.b