திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் - சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி
திருப்பதி, 17 செப்டம்பர் (ஹி.ச.) திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று, சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளையொட்டி, காலை 8 மணிக்கு தொடங்க
பெருமாள்


திருப்பதி, 17 செப்டம்பர் (ஹி.ச.)

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று, சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளையொட்டி, காலை 8 மணிக்கு தொடங்கிய சிம்ம வாகன புறப்பாடு காலை 10 மணி வரை கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

கோவிலில் இருந்து பல்லக்கில் எழுந்தருளிய உற்சவர் மலையப்ப சுவாமி, வாகன மண்டபத்தை அடைந்தார். அங்கு தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அவருக்கு தூபம், தீபம் உள்ளிட்ட சிறப்பு சமர்ப்பணங்கள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் கோவில் மாட வீதிகளில் வலம் வந்தார்.

மாட வீதிகளின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய ஏழுமலையானை தரிசனம் செய்து வழிபட்டனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P