ஏரி வறண்டதால் விநாயகர் சிலையை கரைக்க முடியாமல் ஏரியில் வைத்துச் சென்ற பக்தர்கள்
திருமலை , 18 செப்டம்பர் (ஹி.ச.) ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சோமலா பகுதியில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு தண்ணீர் இல்லாததால், சிலையை ஏரியின் நடுவே வைத்து விட்டு பக்தர்கள் சென்ற சம்பவம் நடந்துள்ளது. சோமலா பகுதியில் பக்தர்கள் மற்றும் இந்து அமைப
A


திருமலை , 18 செப்டம்பர் (ஹி.ச.)

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சோமலா பகுதியில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு தண்ணீர் இல்லாததால், சிலையை ஏரியின் நடுவே வைத்து விட்டு பக்தர்கள் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

சோமலா பகுதியில் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து 3 நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். தற்போது அப்பகுதியில் வறட்சியான சூழல் நிலவி வருவதால், சிலைகளை கரைப்பதற்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், சோமலா ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன சோமலா கிராமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலையை அருகிலுள்ள போஜ்ஜ மல்லையா ஏரியில் கரைப்பதற்காக பக்தர்கள் கொண்டு சென்றனர்.

ஆனால், அந்த ஏரியும் முற்றிலும் வறண்டு தண்ணீர் இல்லாமல் காணப்பட்டது.

இதனால் விநாயகர் சிலையை கரைக்க முடியாத நிலை ஏற்பட்டது. வேறு வழியின்றி பக்தர்கள் சிலையை ஏரியின் நடுப்பகுதியில் வைத்து விட்டு சென்றனர்.

வறட்சியின் காரணமாக விநாயகர் சிலையை கரைக்க முடியாமல் போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA