Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 18 செப்டம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளாவின் ஒரே மகள் அஞ்சலி ரெட்டியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
சோமல ரகுராம் ரெட்டியுடன் அஞ்சலி ரெட்டிக்கு திருமணம் நடைபெற உள்ளது.
திருமணத்தை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி நிச்சயதார்த்தமும், நவம்பர்
25-ந் தேதி திருமணமும், டிசம்பர் 5-ந் தேதி வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
இதையொட்டி ஷர்மிளா தனது குடும்பத்தினருடனும், ரகுராம் ரெட்டியின் பெற்றோருடனும் இடுபுலபாயாவில் உள்ள தனது தந்தையும், மறைந்த முன்னாள் முதல்-மந்திரியுமான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் நினைவிடத்துக்கு சென்றார்.
அங்கு அஞ்சலி ரெட்டி–ரகுராம் ரெட்டியின் திருமணத்துக்கான முதல் அழைப்பிதழை ராஜசேகர ரெட்டி நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றார்.
பின்னர் ஷர்மிளா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தனது தந்தை ராஜசேகர ரெட்டியின் ஆசீர்வாதத்துடன் மகள் அஞ்சலி ரெட்டி மற்றும் ரகுராம் ரெட்டியின் திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
தந்தையின் நினைவிடத்தில் இருந்து இந்த மகிழ்ச்சியான செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், புதுமண தம்பதிகளின் வாழ்க்கை சுகமும், சந்தோஷமும் நிறைந்ததாக அமைய வேண்டும் என்று ஷர்மிளா வாழ்த்து தெரிவித்தார்.
திருமண செய்தியை தொடர்ந்து ஷர்மிளா குடும்பத்தினருக்கும், மணமக்களுக்கும் அரசியல் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA