பா.ஜ.க தேர்தல் ஆணையம் இணைந்து கட்சிகளைப் பிளவுபடுத்துகின்றன- ராகுல் காந்தி
புதுடெல்லி, 18 செப்டம்பர் (ஹி.ச.) சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தொடர்ந்து தற்போது திரிணாமுல் காங்கிரஸ் என ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியான நடவடிக்கைகள் நடைபெறுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது
ராகுல் காந்தி


புதுடெல்லி, 18 செப்டம்பர் (ஹி.ச.)

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தொடர்ந்து தற்போது திரிணாமுல் காங்கிரஸ் என ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியான நடவடிக்கைகள் நடைபெறுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து ஒரு கட்சியைப் பிளவுபடுத்துகின்றன. பின்னர் அந்தக் கட்சியின் தேர்தல் சின்னம் பறிக்கப்படுகிறது. ஒரு முழு கட்சியையே திருட முடியும் என்றால், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குகளையும் திருடுவது ஆச்சரியமல்ல” என தெரிவித்துள்ளார்.

“வாக்குத் திருட்டு, ஆட்சித் திருட்டு, தற்போது கட்சித் திருட்டு என இவை அனைத்தும் நமது ஜனநாயகத்தின் வீழ்ச்சியின் அடையாளங்களாக மாறியுள்ளன” என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பு மக்களின் தீர்ப்பைப் பாதுகாப்பதாகும் என்றும், ஆனால் மக்களின் தீர்ப்பை மாற்றியமைக்கும் சக்திகளுக்கே தேர்தல் ஆணையம் உதவுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், “இந்தப் போராட்டம் மம்தா பானர்ஜிக்கானது மட்டுமல்ல. சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை விரும்பும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு வாக்காளருக்குமான போராட்டம்” என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P