Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 18 செப்டம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள எல்லைப்பட்டி பகுதியில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. வைக்கோல் மீது போர்த்தப்பட்டிருந்த தார்ப்பாயை எடுப்பதற்காக சிறுவன் ஒருவர் லாரியின் மேல் ஏறியுள்ளார். அப்போது சாலையின் குறுக்கே மிகவும் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பி மீது தார்ப்பாய் உரசியதாக கூறப்படுகிறது.
இதில் திடீரென மின்சாரம் பாய்ந்ததில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த சிறுவன் பெரிய கருப்பன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மின்சாரம் பாய்ந்ததால் வைக்கோல் லாரி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் நத்தம் காவல்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாழ்வாக சென்ற மின்கம்பியே இந்த உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b