புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை கைவிடக் கோரி பட்டினப்பாக்கத்தில் நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் ₹1,200 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டுவதற்குத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியு
CPI(M) to stage a protest in Pattinapakkam tomorrow


சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் ₹1,200 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டுவதற்குத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை பட்டினப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக அரசு புதிய தலைமைச் செயலகத்திற்காக வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்தத் திட்டம் மக்கள் நலனுக்கு எதிரானது என்றும், பெரும் நிதி விரயத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நாளை காலை 10 மணியளவில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள உள்ளதாகவும் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, செப்டம்பர் 12 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) சார்பிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பட்டினப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேலும், அப்பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களின் பிரதிநிதிகளும் இத்திட்டத்தை அரசு கைவிடாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b