கோவையில் செப்.18 முதல் 20 வரை அடுத்த தலைமுறை வாகனக் கண்காட்சி
கோவை, 18 செப்டம்பர் (ஹி.ச.) கோவை மெட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஆனமலைஸ் டொயோட்டா விற்பனை மையத்தில் அடுத்த தலைமுறை வாகனங்கள் மற்றும் நவீன வாகனத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வகையில் சிறப்பு வாகனக் கண்காட்சி தொடங்கியது.
கார் கண்காட்சி


கோவை, 18 செப்டம்பர் (ஹி.ச.)

கோவை மெட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஆனமலைஸ் டொயோட்டா விற்பனை மையத்தில் அடுத்த தலைமுறை வாகனங்கள் மற்றும் நவீன வாகனத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வகையில் சிறப்பு வாகனக் கண்காட்சி தொடங்கியது.

செப்டம்பர் 18 முதல் 20-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா ஸ்ரீ திவ்ய நாமானந்தா சாமிகள் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் விஸ்வநாதன், ஆனமலைஸ் குழுமத் தலைவர் காளிச்சாமி, தலைமைச் செயல் அதிகாரி யுவராஜன், விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் சிவராமன், முதன்மை வர்த்தக அதிகாரி கண்ணன், ராமகிருஷ்ணா வித்யாலயா தொழில் பயிற்சி மைய முதல்வர் முரளி, முன்னாள் டீன் மரகதம் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கண்காட்சியில் டொயோட்டா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட கலப்பின வாகனத் தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால வாகனத் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் இவற்றை நேரில் பார்வையிட்டு தொழில்நுட்ப அம்சங்களை அறிந்து கொள்வதுடன், பல்வேறு டொயோட்டா வாகனங்களை ஓட்டிப் பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு சலுகைகள் மற்றும் குடும்பத்தினருக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.

கண்காட்சியின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்களுக்கான ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் நிகழ்வும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எதிர்கால கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்த வழிகாட்டும் நிகழ்வும் நடைபெறுகிறது.

செப்டம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.

கண்காட்சியை பார்வையிட விரும்புவோர் முன்பதிவு செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P