சிறையிலேயே கிரானைட் அதிபர் வீரமணியிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி
சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.) சென்னையில் சிறுமி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கிரானைட் தொழிலதிபர் வீரமணி (வயது 80) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில
Court grants permission to interrogate granite tycoon Veeramani inside the prison.


சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னையில் சிறுமி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கிரானைட் தொழிலதிபர் வீரமணி

(வயது 80) கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் அவரிடம் மேலும் விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும், அவரை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி காவல்துறை தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கைதான கிரானைட் அதிபர் வீரமணியின் உடல்நலம் மற்றும் வயது ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவரது தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், வீரமணியை காவல்துறை காவலில் எடுத்துச் செல்ல அனுமதிக்காமல், புழல் சிறை வளாகத்திலேயே வைத்து இரண்டு நாட்கள் விசாரணை நடத்த காவல்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

80 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால் உடல் நலம் கருதி புழல் சிறையிலேயே வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

இதனையடுத்து, போலீசார் சிறையிலேயே அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b