கூடலூர் வனக்கோட்டத்தில் 2 பேரை கொன்ற புலி சிக்கியது!
கூடலூர், 18 செப்டம்பர் (ஹி.ச.) கூடலூர் வனக்கோட்டம் ஓவேலி வனச்சரகப் பகுதியில் இரண்டு பேரைத் தாக்கிக் கொன்ற புலி, வனத்துறையினரின் தீவிர நடவடிக்கைக்குப் பிறகு பத்திரமாகப் பிடிபட்டது. புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முதுமலை புலிகள் காப்பகம், நடுவட்
புலி


கூடலூர், 18 செப்டம்பர் (ஹி.ச.)

கூடலூர் வனக்கோட்டம் ஓவேலி வனச்சரகப் பகுதியில் இரண்டு பேரைத் தாக்கிக் கொன்ற புலி, வனத்துறையினரின் தீவிர நடவடிக்கைக்குப் பிறகு பத்திரமாகப் பிடிபட்டது.

புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க முதுமலை புலிகள் காப்பகம், நடுவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 305 தானியங்கி மற்றும் ஜி.எஸ்.எம். கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், புலியைப் பிடிப்பதற்காக 14 இடங்களில் பிரத்யேக கூண்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. 100-க்கும் மேற்பட்ட வனத்துறை சிறப்புப் படையினர் களத்தில் ஈடுபட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தபடி புலியைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக, நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு வனத்துறை அமைச்சர் ஆர்.வி. இரஞ்சித்குமார் நேரடியாகக் கூடலூர் பகுதிக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டதுடன், அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியிருந்தார்.

தற்போது புலி பிடிபட்டுள்ளதால், கடந்த சில நாட்களாக அச்சத்தில் இருந்த கூடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam