Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 18 செப்டம்பர் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் ஏனாதி அருகே சாலையோர தடுப்பில் மோதி லாரி கவிழ்ந்த விபத்தில், லாரியில் இருந்த டீசல் முழுவதும் சாலையில் கொட்டியது. இதனால் சிவகங்கை–மதுரை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஏனாதி அருகே சிவகங்கை–மதுரை சாலையில் சென்று கொண்டிருந்த லாரி, திடீரென சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியின் டீசல் டேங்கில் இருந்த டீசல் முழுவதும் சாலையில் கொட்டியது.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகங்கை தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சாலையில் கொட்டிய டீசலால் தீ விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில், தீயணைப்பு வீரர்கள் நுரை அடித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து லாரியை அப்புறப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
டீசல் சாலையில் கொட்டியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தீயணைப்புத் துறையினரின் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ