இந்தியாவில் தொடங்கியது - ஐபோன் 18 ப்ரோ விற்பனை
மும்பை , 18 செப்டம்பர் (ஹி.ச.) ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்தியாவில் இன்று தொடங்கியது. விற்பனை தொடங்கியதையடுத்து, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் ப
A


மும்பை , 18 செப்டம்பர் (ஹி.ச.)

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்தியாவில் இன்று தொடங்கியது.

விற்பனை தொடங்கியதையடுத்து, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் புதிய ஐபோனை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் அதிகாலையிலேயே திரண்டனர்.

இதனால் சில ஆப்பிள் ஸ்டோர்களுக்கு முன்பு நீண்ட வரிசை காணப்பட்டது.

ஆப்பிள் நிறுவனம் கடந்த 9-ந் தேதி நடைபெற்ற ‘சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்’ நிகழ்ச்சியில் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் மாடல்களை அறிமுகப்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, கடந்த 12-ந் தேதி முன்பதிவு தொடங்கிய நிலையில், இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் ஐபோன் 18 ப்ரோவின் ஆரம்ப விலை ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 900 ஆகவும், ஐபோன் 18 ப்ரோ மேக்ஸின் ஆரம்ப விலை ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல்கள் 256 ஜி.பி. முதல் 2 டி.பி. வரையிலான சேமிப்பு திறனில் கிடைக்கின்றன.

புதிய ஐபோன் 18 ப்ரோ சீரிஸில் A20 Pro சிப், 48 மெகாபிக்சல் Fusion பிரதான கேமரா, Variable Aperture வசதி உள்ளிட்ட பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், புதிய வெப்ப மேலாண்மை அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட பேட்டரி செயல்திறனும் வழங்கப்பட்டுள்ளது.

விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே புதிய ஐபோனை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஸ்டோர்களில் குவிந்தனர்.

முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் போன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளம் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA