அமைச்சர் மரிய வில்சன் மீதான தாக்குதல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை - செப்டம்பர் 25ம் தேதி விசாரணை
சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.) தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் தனது சகோதரரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக கூறி அவரது சகோதரர் தரப்பில் புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த சில நாட்களா
அமைச்சர் மரிய வில்சன் மீதான தாக்குதல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை - செப்டம்பர் 25ம் தேதி விசாரணை


சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் தனது சகோதரரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக கூறி அவரது சகோதரர் தரப்பில் புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த சில நாட்களாக விசாரணையில் இருந்து வந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,

வழக்கின் விசாரணைக்கு வரும் 25-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் அந்த தேதி வரை இந்த வழக்கில் எந்தவிதமான விசாரணையும் மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு வரும்

25-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அன்றைய தினம் நடைபெறும் விசாரணையின் போதே இந்த வழக்கின் அடுத்தகட்ட நிலை குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b