மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் -/ வேட்புமனு பரிசீலனை நிறைவு
சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.) மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பணிகள் நிறைவடைந்துள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் வேட்ப
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : வேட்புமனு பரிசீலனை நிறைவு - நாளை வாபஸ் பெற கடைசி நாள்


சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.)

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பணிகள் நிறைவடைந்துள்ளன.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், விதிகளுக்கு மாறான மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, தாக்கல் செய்த வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலையுடன் வாபஸ் காலக்கெடு முடிவடையும் நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

அட்டவணைப்படி, இரண்டு தொகுதிகளிலும் வரும் அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் அக்டோபர் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலும் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் என ஐந்து முனைகளில் கடும் போட்டி நிலவுகிறது.

அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b