Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச)
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் புதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளைப் பெறுவதற்கான நடைமுறையை சென்னை குடிநீர் வாரியம் முற்றிலும் ஆன்லைன் மயமாக்கியுள்ளது.
இதுவரை நேரடியாக அலுவலகங்களுக்குச் சென்று விண்ணப்பித்து வந்த நிலையில், இனிமேல் விண்ணப்பதாரர்கள் அனைவரும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று வாரியம் அறிவித்துள்ளது. தேவையான ஆவணங்களையும் ஆன்லைன் மூலமாகவே பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் வழங்கும் விவரங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குவதற்கான அனைத்து செயல்முறைகளும் நிறைவு செய்யப்படும் என்றும் குடிநீர் வாரியம் உறுதி அளித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் எனவும், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b