Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 18 செப்டம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச் சந்தை நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக செம்பட்டி ஆட்டுச்சந்தை திகழ்கிறது.
இந்த சந்தைக்கு, தேனி, பெரியகுளம், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வடமதுரை, வேடசந்தூர், மணப்பாறை, ஒட்டன்சத்திரம் என
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆடு கிடாக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
இந்த சந்தையில் ஆடுகள் வாங்க திண்டுக்கல் தேனி மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் ஆடு வர்த்தகம் செய்ய அதிக அளவில் செம்பட்டி சந்தைக்கு வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி, பொங்கல், ஆடி பெருக்கு, ரம்ஜான், கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் கிராமங்களில் நடக்கும் திருவிழா காலங்களில் வெள்ளிக்கிழமை நடைபெறும் செம்பட்டி வாரச்சந்தையில் ரூபாய் 2 கோடி முதல் 3 கோடி வரை ஆடு கிடா விற்பனை நடைபெற்று வந்த நிலையில், இன்று புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால், பெரும்பாலான பொதுமக்கள் அசைவம் சாப்பிடுவதில்லை என்பதால், ஆடு கெடா வாங்கும் வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை.
இதனால், ஆடு கிடா விலைகள் குறைந்து மந்தமாக இருந்தது. அதன்படி இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வார சந்தையில் புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால், ரூபாய் 20 ஆயிரத்திற்கு விற்பனையான கிடா, ரூபாய் 17 ஆயிரத்திற்கும் ரூபாய் 15 ஆயிரத்துக்கு வரை விற்பனையான கெடா 12 ஆயிரத்திற்கும் , ரூபாய் 10 ஆயிரத்துக்கு விற்பனையான கிடா ரூபாய் 8 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
Hindusthan Samachar / ANANDHAN