Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.)
சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசனாரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
‘பறையன்’ இதழைத் தொடங்கி, கல்வி, சமூக முன்னேற்றம், சமத்துவம் மற்றும் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர் இரட்டைமலை சீனிவாசனார் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் குரலை அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் வலிமையாக ஒலிக்கச் செய்த முன்னோடிகளில் ஒருவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமத்துவமும் சுயமரியாதையும் நிறைந்த சமூகத்தை உருவாக்க இரட்டைமலை சீனிவாசனார் மேற்கொண்ட அரும்பணிகள் என்றும் நினைவில் நிலைத்திருக்கும் எனத் தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், அவரது சமூகநீதிப் பயணத்தையும் சீர்திருத்தச் சிந்தனைகளையும் நினைவு நாளில் போற்றி வணங்குவதாகக் கூறியுள்ளார்.
மேலும், இரட்டைமலை சீனிவாசனாரின் புகழை தலைமுறைகள் தொடர்ந்து நினைவுகூரட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P