தென்காசி மாவட்டத்தில் அதிகரித்து வரும் வைரஸ் காய்ச்சல்- விழிப்புடன் இருக்க சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தல்
தென்காசி, 18 செப்டம்பர் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவல் என்பது குறைந்து வருவதாகவும், மாறாக வைரஸ் காய்ச்சல் தொற்று என்பது தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா தகவல் தெரி
Virus Fever


தென்காசி, 18 செப்டம்பர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவல் என்பது குறைந்து வருவதாகவும், மாறாக வைரஸ் காய்ச்சல் தொற்று என்பது தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா தகவல் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர், தென்காசி உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த மாதம் காய்ச்சல் தொற்று என்பது அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், கடையநல்லூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மூன்று நபர்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், தற்போது தென்காசி மாவட்டத்தில் டெங்கு பரவல் என்பது குறைந்து வருவதாகவும், அதற்கு மாறாக வைரஸ் காய்ச்சல் என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தென்காசி மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக மருத்துவர்கள் அணுக வேண்டும் எனவும், மருந்து, மாத்திரையை மட்டும் உட்கொண்டால் அதற்கு நிவர்த்தி கிடைக்காது எனவும், மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை அடிப்படையில் மருந்து மாத்திரைகளை உட்கொண்டால் காய்ச்சல் தொற்று குறையும் எனவும் காய்ச்சல் தொற்று வீரியம் அதிகம் இருந்தால் அவர்களுக்கு முறையான தீவிர சிகிச்சை அளிக்க தேவையான முன்னேற்பாடுகள் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளையும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வைரஸ் காய்ச்சல் என்பது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவ அதிக வாய்ப்பு உள்ளதால் பொது இடங்களில் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும், முக கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் எனவும், கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வுகள் மருத்துவர்கள் மூலமும் ஆங்காங்கே உள்ள சுகாதார பணியாளர்கள் மூலமும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், வைரஸ் காய்ச்சல் தொற்றை குறைக்க தேவையான எல்லா நடவடிக்கைகளும் தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN