Enter your Email Address to subscribe to our newsletters

தாராபுரம், 18 செப்டம்பர் (ஹி.ச.)
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, தமிழக வெற்றி கழக வேட்பாளர் சத்தியபாமா தனது முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
தாராபுரம் சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த சத்தியபாமா, பின்னர் கிராமப்புறங்களில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் திருப்பூர் மாவட்டத் தலைவர் தென்னரசு, காங்கேயம் தொகுதியின் முன்னாள் வேட்பாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பொன்னாபுரம், கோவிந்தாபுரம், சத்திரம் உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்ற சத்தியபாமா, பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
மேலும், பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு நின்று சத்தியபாமாவை வரவேற்றதுடன், தங்களது கோரிக்கைகள் மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் குறித்தும் தெரிவித்தனர்.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழக வேட்பாளர் சத்தியபாமாவின் முதல் கட்ட கிராமப்புற பிரசாரம் அரசியல் கட்சிகளிடையே தேர்தல் பணிகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam