Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச)
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று காலை, கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி வீதி உலா நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
சொர்க்கத்தில் தேவர்களுக்கு அவர்கள் கேட்கும் வரங்களை வழங்கும் கற்பக விருட்ச மரமாக கருதப்படுகிறது.
அதேபோல், கலியுகத்தில் தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் மலையப்ப சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பதாக ஐதீகம்.
பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று காலை மலையப்ப சுவாமி ராஜமன்னார் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளினார்.
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மலையப்ப சுவாமியை காண அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நான்கு மாட வீதிகளிலும் குவிந்தனர்.
தொடர்ந்து கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டு சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ