உதயநிதியை வைத்து எல்லாம் அரசியல் செய்ய முடியாது என்று கூறியவர் கே.என். நேரு - துரை வைகோ
திருச்சி, 18 செப்டம்பர் (ஹி.ச.) திருச்சியில் துரை வைகோ எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நான் அரசியலுக்கு வந்தது விபத்து தான். முடிந்தவரை திருச்சி தொகுதிக்கு நல்லது செய்து செல்கிறேன். திமுகவின் முக்கிய பிரமுகரை திருச்ச
Durai Vaiko


திருச்சி, 18 செப்டம்பர் (ஹி.ச.)

திருச்சியில் துரை வைகோ எம்பி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

நான் அரசியலுக்கு வந்தது விபத்து தான். முடிந்தவரை திருச்சி தொகுதிக்கு நல்லது செய்து செல்கிறேன்.

திமுகவின் முக்கிய பிரமுகரை திருச்சி மாவட்டத்தில் தோற்கடித்தது நேருதான்.

நான் செத்தாலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டேன் என்று அன்றே கூறினேன். அதை தமிழ்நாடே பார்த்தது.

எங்க ஐயாக்காக நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். தனிப்பட்ட விருப்பத்திற்காக நான் அரசியலுக்கு வரவில்லை.

திருச்சி மக்களுக்கும் எனது கட்சிக்கும் நான் நம்பிக்கையானவனாக இருக்க வேண்டும் என்று நான் செயல்பட்டு வருகிறேன்.

கலைஞர் காலத்தோடு அரசியல் முடிந்து போச்சு, இந்த பையன வைத்து எல்லாம் அரசியல் செய்ய முடியாது என்று இன்றைய எதிர்க்கட்சி தலைவரைப் (உதயநிதி) பற்றி நேரு சிறுமைப்படுத்தி பேசினார். இதுதான் நேரு.

இதற்கு மேல் நான் பேச விரும்பவில்லை. நான் மக்கள் பணியில் செய்து வருகிறேன் மக்களுக்கு நல்லது செய்து கொண்டிருக்கிறேன். அதை நீங்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

திருச்சியில் இருக்கிற வரைக்கும் நல்ல பெயரோடு செல்ல வேண்டுமென்று நினைக்கிறேன்.

முடிந்த அளவுக்கு இந்த ஊருக்கு நல்லது செய்துவிட்டு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

நேருவின் உழைப்பை என்றும் மதிக்கிறேன். சிறுமைப்படுத்துவது, பண்ணையாளர் அரசியல் செய்வது என்னிடம் நடக்காது..

என்னை மதித்தால் நான் மதிப்பேன். பதிலுக்கு ஏதாவது செய்தார்கள் என்றால் முழு நேரம் இதற்காக நான் ஒதுக்கி ஏதாவது செய்வேன்.

மிசா காலத்தில் நான் பிறக்கவே இல்லை என்று தவறான கருத்தை சொல்கிறார். அப்போது எனக்கு மூன்று வயது.

பிளே ஸ்கூல் சென்று கொண்டிருந்தேன். அந்த வரலாறு கூட அவருக்கு தெரியவில்லை அவருக்கு சொல்லுங்கள் என்று பேசினார்.

Hindusthan Samachar / ANANDHAN