தொழில்துறை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், காலை உணவுத் திட்ட விரிவாக்கம் குறித்து முதல்வர் விஜய் இன்று ஆலோசனை
சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.) தொழில்துறை சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தொழில்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்களின
Cm


சென்னை, 18 செப்டம்பர் (ஹி.ச.)

தொழில்துறை சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தொழில்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை மற்றும் அவற்றை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திட்டத்தை விரிவுபடுத்தும் பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் இருந்து முதலமைச்சர் விஜய் விவரங்களை கேட்டறிய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்தத் திட்டம் தொடர்பான முன்னேற்பாடுகள், செயல்படுத்தும் முறை மற்றும் தொடக்க நிகழ்ச்சி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ள இந்த நிகழ்ச்சிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் எந்த இடத்தில் நடைபெறும் என்பது குறித்து இன்று முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிகழ்ச்சிகளுக்கான இடம் இறுதி செய்யப்பட்ட பின்னர், அதுதொடர்பான அடுத்தகட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ