Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 18 செப்டம்பர் (ஹி.ச.)
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வணிகரீதியான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கட்டணம் அக்டோபர்
15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சிறு வணிகர்கள், நெசவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார்.
ரூ.5,000-க்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தினால் ரூ.20-ம், ரூ.75,000-க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் ரூ.300-ம் கட்டணமாகும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட சில பிரிவுகளில் ரூ.2,000-க்கு மேல் பரிவர்த்தனைக்கு ரூ.5 கட்டணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர்களுக்கு இடையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
யுபிஐ சேவை அனைவருக்கும் கட்டணமற்றதாக தொடர வேண்டும் என்றும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் சிறு வணிகர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்றும் ஜோதிமணி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam