Enter your Email Address to subscribe to our newsletters

நகோயா , 18 செப்டம்பர் (ஹி.ச.)
ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்கள் கிரிக்கெட் போட்டியும் தொடங்கியது.
20 ஓவர் முறையில் நடைபெறும் இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அனைத்து அணிகளும் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
ஜப்பானுடன் இந்தியா
நடப்பு சாம்பியனான இந்திய பெண்கள் அணி இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது.
காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து ஜப்பான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
அரையிறுதியில் வங்காளதேச அணியை எதிர்கொள்ளும்.
இதனால் ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி, ஆசிய விளையாட்டு போட்டியில் தக்கவைத்துள்ள சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் இந்திய அணி களம் இறங்கியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA