குன்றத்தூர் அருகே நண்பர்களுடன் மது அருந்திய ஆட்டோ ஓட்டுநர் கல்லால் அடித்து படுகொலை - தலைமறைவான கும்பலுக்கு வலைவீச்சு
காஞ்சிபுரம், 19 செப்டம்பர் (ஹி.ச) காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், வயது 24. ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் மது அருந்தியுள்ளார். அ
Auto-rickshaw driver bludgeoned to death


காஞ்சிபுரம், 19 செப்டம்பர் (ஹி.ச)

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், வயது 24. ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த நண்பர்கள் விக்னேஷின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்னேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள நண்பர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b