சாதிச் சான்று உண்மையல்ல என்ற உத்தரவு,சுங்கத்துறை உதவி ஆணையர் வழக்கு – மாவட்ட குழு மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.) பணி ஓய்வு பெற இருந்த நிலையில், தனது சாதிச் சான்றிதழ் உண்மையல்ல என மாவட்ட குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுங்கத்துறை உதவி ஆணையர் ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், கிறிஸ்தவ மதத்தில் இருந்து மீண்டும் இந்து மதத்துக்கு மாற
High court


சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.)

பணி ஓய்வு பெற இருந்த நிலையில், தனது சாதிச் சான்றிதழ் உண்மையல்ல என மாவட்ட குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுங்கத்துறை உதவி ஆணையர் ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், கிறிஸ்தவ மதத்தில் இருந்து மீண்டும் இந்து மதத்துக்கு மாறிய ஒருவரை இந்து சமூகம் ஏற்றுக்கொண்டிருந்தால், அவர் பட்டியலினத்தவர் சாதிச் சான்றிதழ் பெறுவதற்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மனுதாரர் இந்து கடவுளை வழிபடுகிறாரா, இந்து சமூகத்தினர் அவரை ஏற்றுக்கொண்டுள்ளனரா உள்ளிட்ட அம்சங்களை மாவட்ட குழு முறையாக ஆராய்ந்திருந்தால், அது சரியான விசாரணையாக இருந்திருக்கும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மனுதாரர் நிறமாகவும், உயரமாகவும், சுருட்டை முடியுடனும், நல்ல உடற்கட்டுடனும் இருப்பதுடன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார் என்பதன் அடிப்படையில் அவர் கிறிஸ்தவர் என மாவட்ட குழு முடிவு செய்திருப்பது பொருத்தமற்றது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ரவிக்குமாரின் சாதிச் சான்றிதழ் தொடர்பாக மாவட்ட குழு மீண்டும் விசாரணை நடத்தி, அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து 8 வாரங்களுக்குள் புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ