Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை விமான நிலைய நிர்வாகத்தை 'AAI'-யிடம் இருந்து பிடுங்கி, தனியாருக்குத் தாரைவார்க்கக் கோரி கடந்த ஆகஸ்ட் மாதமே ஒன்றிய அரசுக்கு ரகசியக் கடிதம் எழுதியுள்ளார் டம்மி முதலமைச்சர் விஜய் என்ற செய்தி உண்மையா? என்று திமுக ஐ.டி. விங் தனது எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறது.
அதில்,
மக்கள் நலன் என நாடகமாடும் தவெக அரசு, இந்தத் துரோகக் கடிதத்தை ஒரு மாதம் முழுவதும் மக்களிடம் மறைத்தது ஏன்?
பாஜகவைக் கொள்கை எதிரி என நாடகமாடிவிட்டு, அதே பாஜகவின் மக்கள் மற்றும் தொழிலாளர் விரோத 'தனியார்மயமாக்கல்' கொள்கையைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த நினைப்பது தான் தவெக-வின் கொள்கையா?
ஒரு முதலமைச்சரின் வேலை பொதுத்துறைச் சொத்துகளையும் மாநில உரிமைகளையும் பாதுகாப்பதா? அல்லது தனியார் லாபத்திற்காகத் தரகு வேலை பார்ப்பதா?
தவெக-வினரை விட அதிகம் முட்டுக்கொடுக்கும் தோழமைக் கட்சிகளே, உங்களுக்கும் ஒரு பங்கு கிடைத்துவிட்டது என்ற காரணத்திற்காக, தமிழ்நாட்டையே கூறுபோட்டு விற்றாலும் உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை அப்படித்தானே? என்று பதிவிட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN