மாணவர் பாரதிதாசனுக்கு ஒரே நாளில் ரூ.23.95 லட்சம் கல்வி உதவித்தொகை விடுவிப்பு
சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச) வெளிநாட்டில் உயர்கல்வி பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்விக் கனவை நனவாக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் டாக்டர் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தில், மாணவர் பாரதிதாசனுக்கு ஒரே நா
மாணவர் பாரதிதாசனுக்கு ஒரே நாளில் ரூ.23.95 லட்சம் கல்வி உதவித்தொகை விடுவிப்பு


சென்னை, 19 செப்டம்பர் (ஹி.ச)

வெளிநாட்டில் உயர்கல்வி பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்விக் கனவை நனவாக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் டாக்டர் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தில், மாணவர் பாரதிதாசனுக்கு ஒரே நாளில் ரூ.23.95 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதில் அவரது வாழ்க்கைச் செலவு மற்றும் ஆராய்ச்சிக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மட்டும் ரூ.17.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட உதவித்தொகைக்கு மாணவர் பாரதிதாசன் முறையான பற்றுச்சீட்டுகள் மற்றும் செலவின அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இதனால் அவருக்கான உதவித்தொகை நிறுத்தப்படுமோ என்ற சூழல் உருவானது.

இந்த நிலையில், பில்கள் சமர்ப்பிப்பதில் குளறுபடி இருந்தாலும், ஒரு மாணவரின் கல்வி எந்தக் காரணத்தைக் கொண்டும் பாதிக்கப்படக்கூடாது என்ற மனிதநேய அடிப்படையில் சமூக நீதித்துறை முக்கிய முடிவை எடுத்துள்ளது.

மாணவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நடைமுறைகளை தளர்த்தி ஒரே நாளில் மொத்தமாக ரூ.23.95 லட்சத்தை விடுவித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை கல்வி வட்டாரத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

Hindusthan Samachar / vidya.b